dinamalar telegram
Advertisement

தீர்ப்பாயங்களுக்கு நியமனம்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Share
Tamil News
புதுடில்லி: தீர்ப்பாயங்களுக்கான நியமனங்களை நிரப்புவதில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் 250க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களில் தலைவர், தொழில்நுட்ப மற்றும் சட்ட நிபுண உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு உத்தரவிட்டு இருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு கூறியுள்ளதாவது: தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால், தீர்ப்பாயங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால், வழக்குகள் தேங்கியுள்ளன. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.ஆனால், ஒரு சில தீர்ப்பாயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

அதிலும் முறையாக செயல்படவில்லை. பரிந்துரை செய்த பட்டியலில் இருந்து சிலரையும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து சிலரையும் நியமித்துள்ளனர்.

பரிந்துரை



பட்டியலில் உள்ளவர்களை மீறி, காத்திருப்போர் பட்டியலில் இருந்து எப்படி நியமிக்க முடியும். இப்படித்தான் தலைவர்களை தேர்வு செய்வதா?கொரோனா காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாடு முழுதும் பயணம் செய்து, தேடுதல் மற்றும் தேர்வுக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு பணியை மத்திய அரசு வீணடித்து உள்ளது.மேலும், தலைவர் பதவியை ஓர் ஆண்டாக குறைத்துள்ளனர்.

எந்த நீதிபதி ஓர் ஆண்டுக்கான பதவியில் சேர தயாராக இருப்பார்.காலியாக உள்ள அனைத்து பதவிகளுக்கும், இரண்டு வாரத்துக்குள் நியமனம் செய்ய வேண்டும். பரிந்துரை பட்டியலில் இருந்து சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால், அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வுகூறியுள்ளது.

அவசர கோலத்தில் நியமனம்



உச்ச நீதிமன்ற அமர்வு மேலும் கூறியுள்ளதாவது:தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த, நீதிபதி சீமாவின் பதவிக் காலம் முடிய, 10 நாட்கள் இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக பொறுப்பு தலைவராக, நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏன் இந்த அவசரம்? இது குறித்து அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5 + 2)

  • sankaseshan - mumbai,இந்தியா

    அரசை குற்றம் சொல்லும் நீதிபதிகள் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு கொடுப்பது எப்போது வாய்தா கொடுத்தே காலம் தள்ளுகிறார்கள்

  • P.K.SELVARAJ - Chennai,இந்தியா

    உச்ச நீதிமன்ற பரிந்துரையை அப்படியே ஏற்க அவசியமில்லை. ஆனால் மாற்றம் செய்து உடன் நீதிமன்ற பரிந்துரை பெற்று நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை. இது போல் காங்கிரஸ் அரசு செய்திருந்தால் பிஜேபி போர்க்களம் போல் ஆக்கி இருக்கும். அவர்கள் எது செய்தாலும் தப்பில்லை. "இடிப்பார் இல்லா எமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்" இந்த அரசுக்கு நினைவூட்டுங்கள். தொழிலாளர் பிரச்சினை தாமதபடுவது தெய்வம் நிந்தனை போன்றது.

  • Ellamman - Chennai,இந்தியா

    சென்னையில் உள்ள CESTAT சுங்க மற்றும் மத்திய கலால் வரிகளுக்கான தீர்ப்பாயம் கடந்த நான்கு வருடங்களாக முழுமையான அமர்வு இல்லாமல் வழக்குகளை முடக்கி வைத்துள்ளது. இதனால் மத்திய அரசு வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறது. இங்கு தேங்கி உள்ள வழக்குகளில் பல ஆயிரக்கணக்கான கோடிகள் வரி பணம் முடங்கி உள்ளது. தற்போது நாட்டில் கடுமையான வருவாய் பற்றாக்குறை இருக்கும் போது கூட இந்த வழக்குகளை துரிதமாக விசாரித்து தீர்ப்பு வழங்க எந்த விதமான முன்னெடுப்புகளையும் இந்த மத்திய அரசு செய்யவில்லை. அந்த தீர்ப்பாயத்தில் உள்ள மறைமுக வரி ஆணைய அதிகாரிகளுக்கு வெட்டி சம்பளம் கொடுத்து மக்கள் வரி பணத்தை வீணடிக்கிறது. பல ஆயிரக்கணக்கான கோடி ருபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள இறக்குமதியாளர்களுக்கு துணை போகிறது அரசு. அதிலும் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் வழக்குகளை விசாரிக்க முயற்சிகளே எடுப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் வழக்குகள் பட்டியிலிடப்பட்டால் விசாரணையை ஒத்தி வைக்க அரசு தரப்பே பல முறை கேட்கும் அவலம் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் அந்த பன்னாட்டு நிறுவனங்கள் கொடுத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் பத்திரம் செய்யும் வேலை. தமிழகத்தில் அமைத்திருக்கும் பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழக்குகள் இது வரை எத்தனை முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ந்தால் பல கூட்டுகள்/ குட்டுகள் வெளிப்படும்.

  • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    எவ்ளோ அடிச்சாலும் எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் சொரணையற்ற அரசா மாறுது இந்த ஒன்றிய அரசு. உச்சநீதிமன்றம் இவ்ளோ கடுமைய காட்டினா கூட எருமை மாட்டு மேலே மழை பெய்தா மாதிரி இருக்கறது எல்லாம் எவ்ளோ அசிங்கம் தெரியுமா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நீதிமன்றங்களால் வழக்குகளை கையாள முடியவில்லை என்பதற்கு தீர்ப்பாயங்கள் மீது இவர்கள் காட்டும் எதிர்பார்ப்பே நல்ல அத்தாட்சி. நீதித்துறைக்கு தேங்கும் வழக்குகளை முடித்து வைப்போம் என்ற நல்லெண்ணம் வந்தாலே போதும் வேகமாக வழக்குகளை முடித்து வைக்க முடியும்.

Advertisement