dinamalar telegram
Advertisement

துப்பாக்கி சுடும் பயிற்சி

Share
சேலம்: சேலம் நகர மலை அடிவாரத்தில் உள்ள, புதிய துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், மாநகர போலீசாருக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. வரும் செப்.,24 வரை நடக்கும் முகாமில், ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றுவோர், குற்றப்பிரிவு உட்பட சிறப்பு பிரிவுகளில் உள்ள போலீசார் முதல் அதிகாரிகள் வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் எட்டியப்பன் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் பயிற்சி வழங்கி வருகின்றனர். இதில், எஸ்.எல்.ஆர்., ஏ.கே.,47, இன்ஸ்டாஸ், பிஸ்டல் ஆகிய துப்பாக்கிகளில், ஒருவருக்கு, 15 ரவுண்ட் வரை சுட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சி போட்டியில், அதிக புள்ளிகள் பெறுவோரின் பட்டியலும் தயாராகி வருகிறது. அதில், போலீசார், அதிகாரிகள் வாரியாக போட்டிகள் நடத்தப்படும். புள்ளிகள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெறுபவர் களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement