dinamalar telegram
Advertisement

செயல்படாத ஆழ்துளை கிணறுகள்

Share
மகுடஞ்சாவடி: ஏகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டிதகாரனூர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன், ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மினி டேங்க் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் அனைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து, ஐந்து ஆண்டுக்கு முன் குழாயை அகற்றி அவற்றை பழுது நீக்க எடுத்து சென்றனர். இதுவரை பொருத்தவில்லை. இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்தும், ஐந்து ஆண்டுகளாக மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். எனவே, ஆழ்துளை கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement