dinamalar telegram
Advertisement

குடிநீருக்கு திண்டாடும் மக்கள்

Share
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை பேரூராட்சி, 18வது வார்டுக்கு உட்பட்ட வளையசெட்டிப்பட்டி, மாக்கல்கரடு பகுதியில், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன், மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. ஆனால், இதுவரை அதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒரு கி.மீ., தூரம் சென்று குடிநீர் பெறும் நிலையில் மக்கள் உள்ளனர். எனவே, சீரான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement