dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாம் ஆலோசனை கூட்டம்

Share
காடையாம்பட்டி: காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கடந்த, 12ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில், பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் பலர் திரும்பி சென்றனர். இந்நிலையில் வரும், 17ல் மீண்டும் நடைபெறவுள்ள சிறப்பு முகாமிற்காக, காடையாம்பட்டி தாலுகாவுக்கு மட்டும், 9,000 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பிரித்து வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், காடையாம்பட்டி பி.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் வாசுகி, வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement