dinamalar telegram
Advertisement

கட்டட தொழிலாளி கொலை: மேலும் இரண்டு பேர் கைது

Share
அந்தியூர்: அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55, கட்டட தொழிலாளி. இவரின் மனைவி மல்லிகா, 50, மகன் செந்தில்குமார், 35. கணவரை பிரிந்து வாழ்ந்த சசிகலா, 48, என்பவரை அர்ஜுனன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலத்தை சசிகலாவுக்கு எழுதி வைப்பதாக அர்ஜுனன் கூறினார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மகன் செந்தில்குமார், சில நாட்களுக்கு முன், தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்றார். தலைமறைவான நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் செந்தில்குமார் நேற்று முன்தினம் சரணடைந்தார். இதனிடையே கொலை சம்பவத்தில் செந்தில்குமாருக்கு, அவரின் மைத்துனரான திருச்சி, மண்ணச்சநல்லூரை சேர்ந்த விமல்ராஜ், 36; அதே பகுதியை சேர்ந்த சரவணன், 41; உதவியாக இருந்தனர். இருவரையும் ஆப்பக்கூடல் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement