dinamalar telegram
Advertisement

ஆசனூர் அருகே கோவில் விழாவில் தகராறு: 13 பேர் மீது வழக்குப்பதிவு; மூவர் கைது

Share
ஆசனூர்: ஆசனூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, 13பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர்.
ஆசனூர் மலைப்பகுதியில் கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் நேற்று முன்தினம் இரவு விழா நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். வளாகத்தில் உள்ள புட்டேஸ்வரர் கோவிலை, இதே கிராமத்தை சேர்ந்த, 40 குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இரு தரப்பும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 23 ஏக்கர் நிலத்தில் இருந்து புட்டேஸ்வரர் கோவிலுக்கு நிலத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என, நிர்வாகிகள் கேட்டு வந்தனர். இது தொடர்பாக விழாவில் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் முற்றி அடிதடி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆசனூர் போலீசார் அவர்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகராறு தொடர்பாக கும்பேஸ்வரர் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சிவக்குமார், ஆசனூர் போலீசில் புகராளித்தார். இதன்படி பழைய ஆசனூர் கிராமத்தை சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜடேசாமி, 45, குட்டேமாது, 50, மேசன் ராஜு, 53, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவான, 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement