dinamalar telegram
Advertisement

ஜவுளிச்சந்தை வெறிச்

Share
ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட்டில், வாரச்சந்தை தினமான நேற்று, வழக்கம்போல் தினசரி ஜவுளி கடைகள் செயல்பட்டன. பண்டிகை சீசன் முடிவடைந்ததால், வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வருகையின்றி, சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: பண்டிகை சீசன் இல்லாததால், விற்பனை மந்தமாக இருந்தது. தீபாவளி பண்டிகை விற்பனைக்கு, புது ஜவுளிகளை கொள்முதல் செய்வதிலும், உற்பத்தி செய்வதிலும் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வரும் வாரங்களில் ஜவுளி சந்தை கடைகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே, தமிழக மொத்த வியாபாரிகள், பிற மாநில வியாபாரிகள் வரத்தொடங்குவர். இதை கருத்தில் கொண்டு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம், வாராந்திர ஜவுளி சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement