dinamalar telegram
Advertisement

ஈரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது; மோசடி புகாரில் போலீசார் அதிரடி

Share
ஈரோடு: ஈரோட்டில், பல்வேறு நபர்களிடம், 63 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ரியல் எஸ்டேட் அதிபரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சூளை பகுதியை சேர்ந்த தேவராஜன் மனைவி லதா, 48; ஈரோடு கலெக்டரிடம் புகாரளித்தார். அம்மனு எஸ்.பி., பரிந்துரைப்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்றது. மனுவில் லதா கூறியிருப்பதாவது: டெய்லராக வேலை செய்கிறேன். கடந்த, 2017ல் ஈரோடு, எருக்கங்காட்டு வலசு ஸ்டார் நகரில், வீட்டுமனை விற்கும் விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டேன். ஸ்டார் பாபு (எ) பாபு தஸ்தகீர் பேசினார். எருக்கங்காட்டு வலசு ஸ்டார் நகரில், 2,200 சதுர அடி இடம் வாங்கினேன். கிரயம், வீடு கட்டி கொடுப்பது என, 19.50 லட்சம் ரூபாய்க்கு பேசி, ?.61 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ரசீது, பத்திரம் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால், 2019ல் பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், இதேபோல், 23 பேரிடம் நிலம் தருவதாக, 63 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை உறுதி செய்தனர். பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஈரோட்டில், பெரியார் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில், ஸ்டார்பாபுவை நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement