dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்; இன்று முதல் வேட்பு மனு பெறப்படும்

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 2019ல் நிரப்பப்பட்ட பதவிகளில், இறப்பு, பதவி விலகல் காரணமாக கடந்த ஜூன், 30 வரை ஏற்பட்ட, 27 காலி பணியிடங்களை நிரப்ப தற்செயல் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, நம்பியூர், டி.என்.பாளையம், பவானிசாகர் என, 11 ஒன்றியங்களில் இத்தேர்தல் நடக்கிறது. அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட பஞ்., வார்டு எண்-5, ஈரோடு ஒன்றயம் வார்டு உறுப்பினர் எண்- 4, பெருந்துறை ஒன்றியம் வார்டு உறுப்பினர் எண்-10 மற்றும் நான்கு பஞ்., தலைவர் பதவி, 20 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என, 27 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலுக்கு, இன்று முதல், 22ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல், 5:00 மணி வரை வேட்பு மனு பெறப்படும். வரும், 23 காலை, 10:00 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை, 25 மாலை, 3:00 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுதலும் நடக்கிறது. அக்., 9 காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அக்., 12ல் காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அக்., 16ல் தேர்தல் நடவடிக்கை நிறைவு பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், பஞ்., தலைவர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் அக்., 20ல் நடக்க உள்ளது. இத்தகவலை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement