dinamalar telegram
Advertisement

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்புக்கு கண்டனம்

Share
ஈரோடு: 'சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு விவசாய விரோத போக்காகும்' என, விவசாய சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது: உலகில் அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த எண்ணெய் தேவையில், மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் ஒரு கிலோ பாமாயில், 60 ரூபாய்க்கு இறக்குமதி செய்கிறது. இதற்கு அரசு, 35 ரூபாய் மானியம் வழங்கி, 25 ரூபாய்க்கு மக்களுக்கு ரேஷனில் விற்கிறது. இதேநேரம், இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றுக்கு மானியம் வழங்குவதில்லை. ரேஷன் கடைகளிலும் வினியோகிக்க முன்வரவில்லை. இதற்கிடையில் இந்திய அரசு சமையல் எண்ணெய் மீதான இறக்குமதியை வரியை, 2.5 சதவீதமாக குறைத்துள்ளது. இச்செயல் விவசாய விரோதப்போக்காகும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement