dinamalar telegram
Advertisement

அரசு மாதிரி பள்ளியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா

Share
கோபி: கவுந்தப்பாடி அரசு மாதிரி பள்ளியில், மேலும் ஒரு மாணவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ??? மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தலா இருவர் என, நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிளஸ் ? மாணவர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு ஐந்தாக உயர்ந்தது. ஏற்கனவே, ??? மாணவர்களுக்கு பி.சி.ஆர்., சோதனை செய்யப்பட்ட நிலையில், 60 மாணவர்களுக்கு நேற்று சளிமாதிரி பரிசோதனை நடந்தது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சளிமாதிரி மேற்கொண்ட மறுநாள் பள்ளி செயல்படக்கூடாது என்பதால், பள்ளி நேற்று இயங்கவில்லை என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement