dinamalar telegram
Advertisement

கருங்கல்பாளையத்தில் காவிரி பாலம் அருகே தடுப்பு

Share
ஈரோடு: கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையேயுள்ள, இரண்டு காவிரி பாலங்களும், நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறையினர் பொறுப்பில் உள்ளது. ஈரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் பழைய பாலம் வழியாகவும், நாமக்கல் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாகவும் வந்து செல்கின்றன. இதில் கருங்கல்பாளையம் பழைய பாலம் பகுதியில், பக்கவாட்டில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது. குறிப்பாக பாலத்தை ஒட்டிய இடத்தில் ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஆற்றுக்குள் பாயும் வகையில் வெட்டவெளியாக இருந்தது. சமீபத்தில் இங்கு ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறையினர், மலைப்பகுதி வளைவுகளில் பயன்படுத்தும் இரும்பு தகடு தடுப்புகளை அமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement