dinamalar telegram
Advertisement

திரும்பிய திசையெல்லாம் மாநகர பகுதியில் பிளக்ஸ்: நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

Share
ஈரோடு: ஈரோடு மாநகர பகுதியில் கடைகள் முன்பும், சாலைகள், பெரிய கட்டடங்களின் மீதும் பிளக்ஸ், பேனர்களுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
பிளக்ஸ், பேனர், கட்-அவுட் போன்றவற்றை அகற்ற, அரசு உத்தரவிட்டு, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் அகற்றி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் புதிது புதிதாக பிளக்ஸ் போர்டுகளும், பேனர்களும் வைக்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை அனுமதி பெறாமலும், ஆபத்தானதாகவும் உள்ளன. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி ஒன்று மற்றும் இரண்டாவது மண்டலங்களில் பெருந்துறை சாலை, ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிர் வரிசை மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் மீது கட்டி வைத்தும், சத்தி சாலை, சுவஸ்திக் கார்னர் பகுதியில் மின் கம்பங்களிலும், கட்டடத்தின் உயரத்தில் என அனைத்து இடங்களிலும் பல்வேறு அளவிலான பிளக்ஸ்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அனுமதி பெறாதவை. சாலையின் சென்டர் மீடியனில் கூட, மின் இணைப்புடன் சிறு அலங்கார பெட்டி வடிவில் விளம்பரம் வைத்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை ஆளும் கட்சியினர் ஒப்பந்தம் எடுத்துள்ளனர். இதனால் மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் அகற்ற அச்சப்படுகின்றனர். இதற்கிடையில் கடந்த, ??ம் தேதி பிளக்ஸ் அகற்றம் தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது. இது தொடர்பாக பிரஸ் ரிலீஸ் கூட வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது. ஆபத்தான, அனுமதி பெறாத பிளக்ஸ்களை முழுமையாக, பாரபட்சமின்றி அகற்ற சமூக ஆர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றி, கலெக்டரிடம் கேட்டபோது, ''பிளக்ஸ், பேனர்களை அகற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த வாரம் கூட்டம் நடத்தப்பட்டது. ஓரிரு நாளில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement