dinamalar telegram
Advertisement

பொய் வழக்கு போடும் போலீஸ்: இலங்கை தமிழர்கள் போராட்டம்

Share
அறச்சலூர்: அறச்சலூரில் இலங்கை தமிழர் முகாமில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். முகாம் இளைஞர்கள் மீது அறச்சலூர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக, புகார் கூறி வந்தனர். மேலும், கியூ பிராஞ்ச் ஏட்டு செல்வசுந்தரம் அச்சுறுத்தல் அளிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போலீசார், வருவாய் துறையினர் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, போராட்டத்தை கைவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement