dinamalar telegram
Advertisement

விவசாயிகள் பந்த்: கமல் ஆதரவு

Share
சென்னை:அகில இந்திய அளவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவுகேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை போராட்ட ஒருங்கிணைப்புகுழுவினர் சந்தித்தனர்.

விவசாயிகள் அமைப்பினர் சார்பில், வரும் 27ல் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள், கமலிடம் ஆதரவு கேட்டு, கடிதம் கொடுத்துள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னை குறித்து, பல விபரங்களை நிர்வாகிகளிடம் கேட்டறிந்த கமல், ஒரு பகுதி போராட்டத்தில் தலைமை ஏற்று, பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement