dinamalar telegram
Advertisement

புர்கா எங்கள் கலாச்சாரம் இல்லை: ஆப்கன் பெண்கள் பிரசாரம்

Share
காபூல்: தலிபான்கள் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிராக பல பெண்கள் சமூக ஊடகங்களில் பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளனர். தங்களின் வண்ணமயமான ஆப்கன் கலாசார ஆடைகளுடன் கூடிய புகைப்படங்களை பகிர்ந்து இது தான் எங்கள் உடை. எங்கள் உடையின் மீது கை வைக்காதீர்கள் என கூறியுள்ளனர்.
தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதும் அந்நாட்டு பெண்களின் நிலை பல நூற்றாண்டுகள் பின் நோக்கி சென்றுவிடுமோ என்ற அச்சம் தான் முதலில் எழுந்தது. தற்போது அங்கு அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் அமைச்சர்கள் ஒருவருக்கும் அதில் இடமில்லை. அதே போல் பெண்கள் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு எதிராக அந்நாட்டு உயர் கல்வி அமைச்சரே பேசியிருந்தார்.

மேலும் உடல் முழுவதையும் மறைக்கும் கருப்பு மற்றும் நீல நிற புர்காக்களை தான் மாணவிகளை அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. தலிபான்களின் இந்த உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பு பெண்கள் கடந்த வார இறுதியில் பேரணியும் நடத்தினர்.
இந்நிலையில் மற்றொரு தரப்பு பெண்கள் இந்த கடுமையான ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் பல்கலைக்கழகம் மற்றும் வேலை இடங்களுக்கு ஆப்கனின் வண்ணமயமான கலாசார ஆடைகளையே அணிந்து சென்றதாக கூறுகின்றனர்.


ஆப்கனில் உள்ள அமெரிக்க பல்கலையின் முன்னாள் வரலாற்று பேராசிரியர் பஹார் ஜலாலி இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளார். #DoNotTouchMyClothes (என் ஆடையை தொடாதே) மற்றும் #AfghanistanCulture (ஆப்கன் கலாசாரம்) போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி தாங்கள் அணிந்துள்ள பாரம்பரிய ஆடைகளின் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தனது பச்சை நிற உடையை பகிர்ந்து ஜலாலி கூறியதாவது “ஆப்கானிஸ்தானின் அடையாளம் மற்றும் இறையாண்மை தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது எனக்கு கவலை தருகிறது. நீங்கள் ஊடகங்களில் பார்க்கும் ஆடைகள் எங்கள் கலாச்சாரம் அல்ல, அது எங்கள் அடையாளம் அல்ல.” என்றார்.

விர்ஜினியாவில் வசிக்கும் ஆப்கனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்போஜ்மே மசீத், கண்கவரும் ஆடையில் அவரது படத்தை வெளியிட்டு “இது தான் எங்கள் ஆப்கானிஸ்தானின் உண்மையான உடை. ஆப்கானிய பெண்கள் இத்தகைய வண்ணமயமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிவார்கள். கருப்பு புர்கா ஒருபோதும் ஆப்கானிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததில்லை.

பல நூற்றாண்டுகளாக நாங்கள் ஒரு இஸ்லாமிய நாடாக இருக்கிறோம். எங்கள் பாட்டிகளும் இத்தகைய ஆடைகளையே அணிந்தார்கள் நீல நிற சதாரியோ, அரபின் கருப்பு புர்காவோ அணியவில்லை” என கூறியுள்ளார்.
ஆப்கன் ஆய்வாளரும் பெண்கள் பிரச்னைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்தி வருபவருமான லிமா ஹலிமா அகமது தெரிவிக்கையில் “ எங்கள் அடையாளத்தை பயங்கரவாத குழுக்களால் வரையறுக்க முடியாது. எங்கள் கலாச்சாரம் இருளானது இல்லை. கருப்பு, வெள்ளையும் இல்லை. அது வண்ணமயம், அழகு, கலை, கைவினை ஆகிய அடையாளங்களை கொண்டது.” என குறிப்பிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (35)

 • Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ

  ஆப்கானிய மக்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டு முஸ்லிமாக மாறியதால் எந்த பயனும் இல்லை, மாறாக அவர்களை சைத்தான் பிடித்து கொண்டது போல் அவர்கள் படும் பாடு அந்த அல்லாவுக்கே பொறுக்காது. இஸ்லாம் தான் தாலிபான்களை, IS தீவீரவாதிகளையும் தோற்றுவிக்க காரணமது. ஆப்கான் மக்கள் இவர்களால் தங்கள் சொந்த நாட்டிலேயே கொடுமை படுத்த பட்டு அடிமைகளாக வாழ்கிறார்கள். பெண்களின் நிலை மிக மோசம், நரகத்தை விட கொடுமையை இந்த இஸ்லாம் இவர்களுக்கு கொடுத்துள்ளது. இதுபோலவே சிறியா போன்ற மற்ற முஸ்லிம்கள் மட்டுமே வாழும் நாடுகளிலும் இதே நிலை. பக்கத்துக்கு முஸ்லீம் நாடுகளான ஈரானோ, பாகிஸ்தானோ இவர்களுக்கு உதவவில்லை. எண்ணெய் வளத்தில் கொழிக்கும் பணக்கார நாடுகளான சவூதி, துபாய், கடத்தார், ஈராக் மற்றும் 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இஸ்லாத்தால் இவர்கள் கண்ட பலன் எதுவும் இல்லை. இஸ்லாம் இவர்களின் நிம்மதியை கெடுத்தது, அடிமை படுத்தியது. எதட்காக இவர்கள் இஸ்லாத்தில் இருக்க வேண்டும், இஸ்லாத்தை விட்டு வெளியேறுங்கள் - உங்கள் நாட்டின் உண்மையான ஒரிஜினல் (Culture & Heritage) இறையான்மையை பேணி நல்ல மானமுள்ள, பெருமைமிகு ஆப்கானியராக அமைதியாக வாழுங்கள். இஸ்லாம் என்னும் சைத்தானை, பீடையை ஆப்கானிலிருந்து விட்டொழியுங்கள். உலக அமைதிக்கு பங்ககமான, தீவீரவாதிகளை உருவாக்கும் பாகிஸ்தானை அழித்து, நிராயுதபாணியாக்கினால் உலகம் அமைதியை காணும் அதன் அருகாமை நாடுகளும் அமைதி பெற்று, வளமான வாழ்கை பெறுவார்கள்.

 • jayvee - chennai,இந்தியா

  உங்களுக்கு இருக்கிற மூளை எங்கவூரு மூளை கறி விக்கறவனுக்கு இல்லையே

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  புருக்கா என்பது பெண்களுக்கு ஆண்டவன் அழித்த நன்கொடை. எனவே இசுலாமிய பெண்கள் புருக்கா அணிந்து ஆண்டவன் கட்டளைக்கு அடி பணிந்தால் சொர்க்கம் பரிசாக கிடைக்கும். இல்லையேல் கடும் நரகத் தீயில் வேக வேண்டும்.

  • பெரிய ராசு - தென்காசி

   அப்படியே இங்கே உள்ள புர்கா மூர்க்க நாதாரிகளை ஆப்கான் கொண்டு விடவும்

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  45 டிகிரி வெயிலில் எப்படித்தான் உடம்பு முழுவதும் வெயிலை இழுக்கும் கருப்பு ஆடையை அணிகிறார்களோ கொரோன தடுப்பிற்கு மாஸ்க் அணிவதிற்கே நமக்கு மூச்சு முட்டுகிறது. என்ன காட்டுமிராண்டித்தனம்?? என்ன பெண் அடிமைத்தனம்

 • Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  பெண்கள் தான் அதிகம் நரகத்தில் இருப்பார்கள் என்று எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்

Advertisement