dinamalar telegram
Advertisement

கோவில் படிக்கட்டுகளில்...!

Share
Tamil News

கோவில் படிக்கட்டுகளில்...!



பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், கடந்த சில நாட்களாகவே குளிர் காய்ச்சல் வந்தவர்கள் போல் நடுங்கி போயுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு முதல்வர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம். கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார். உத்தரகண்டில் இரண்டு முதல்வர்கள் மாற்றப்பட்டனர். சமீபத்தில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இவர்களில் எடியூரப்பாவுக்கு மட்டுமே வயது காரணமாக மாற்றப்பட்டதாக காரணம் கூறப்பட்டது; மற்றவர்கள் என்ன காரணத்துக்காக மாற்றப்பட்டனர் என்ற விபரம் யாருக்குமே தெரியாது. சில மாதங்களுக்கு முன் வரை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் கசிந்தன.


இதற்காக அவர் டில்லியில் முகாமிட்டிருந்தார்; ஆனால், எப்படியோ அவரது பதவி தப்பிப் பிழைத்து விட்டது. விஜய் ரூபானி மாற்றத்துக்கு பின், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும் கடும் கலக்கத்தில் உள்ளனர். 'ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, நம்மையும் துாக்கி அடித்து விடுவரோ' என, கவலையில் ஆழ்ந்துள்ளனர். 'முதல்வர் பதவியிலிருந்து என்னை யாரும் அசைக்க முடியாது' என, உள்ளூர் கட்சி பிரமுகர்களிடம் கெத்தாக பேசிய பல முதல்வர்கள், பதவியை தக்க வைப்பதற்காக கோவில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement