dinamalar telegram
Advertisement

வசீம் அக்ரம் கொலையில் மேலும் 4 பேர் கைது

Share
வாணியம்பாடி:வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலையில் மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40. மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளாக இருந்தார். கடந்த 10ம் தேதி இரவு அவரை காரில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கூலிப்படையை சேர்ந்த ரவி, 23, தில்லிகுமார், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா வியாபாரி இம்தீயாஸ் குறித்து போலீசாருக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்ததால் கொலை செய்தது தெரிந்தது.

போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டம், மணிவாசகத்தை சேர்ந்த அகஸ்டீன், 19, சத்திய சீலன், 20, வண்டிலுார் ஓட்டேரியை சேர்ந்த பிரவீன் குமர், 20, முனீஸ்வரன், 20, செல்வகுமார், 21, ஊரப்பாக்கம் அஜய், 21, ஆகியோர் நேற்று முன்தினம் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று வாணியம்பாடி ஜீவா நகரில் பதுங்கியிருந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் வாணியம்பாடி நியூடெல்லியை சேர்ந்த பைஜல், 25, நேதாஜி நகர் மகமத் அலி, 19, ஜீவா நகர் நமீம், 28, முஸ்லீம் பூரை சேர்ந்த பூயல் ஜமால், 22, என்பதும், இவர்கள் வசீம் அக்ரத்தை கொலை செய்ய கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும், கொலைக்கான வீச்சரிவாள்களை வாங்கி வந்து சாணை பிடித்து தயாராக வைத்திருக்க உதவியதும் தெரியவந்தது. வாணியம்பாடி போலீசார் மேற்கண்ட நான்கு பேரை இன்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement