dinamalar telegram
Advertisement

சிவகங்கையில் பெட்ரோல் குண்டு வீச்சு

Share
Tamil News
சிவகங்கை:சிவகங்கை தொண்டி ரோடு சர்ச் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் 42. இவர் நேற்று முன்தினம் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அன்னதான நிகழ்ச்சிக்கு சென்றார்.


அங்கு வந்த சிவகங்கை வேலுநாச்சியார் தெரு நிர்மல் 22, விக்கி 22, வெங்கடேஷ் 23, மதன் 22, ஆகிய 4 பேர்களும் சேர்ந்து பழனியப்பனிடம் பிரச்னை செய்துள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு 4 பேர்களும் சேர்ந்து பழனியப்பன் வீட்டு ஜன்னலில் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிவகங்கை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement