dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,658 ஆக சற்று அதிகரித்துள்ளது: 1,542 பேர் நலம்

Share
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,591-ல் இருந்து 1,658 ஆக சற்று அதிகரித்துள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,542 பேர் குணமடைந்து உள்ளனர்.


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,50,740 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,658 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,46,77,820 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.


இன்று கோவிட் உறுதியானவர்களில் 959 பேர் ஆண்கள், 699 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,40,458 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,98,172ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,542 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,86,786 ஆக உயர்ந்துள்ளது.


29 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 23 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,246ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக இருந்த நிலையில் இன்று (15ம் தேதி) 226 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக விபரம்



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    தமிழ்நாட்டுக்கு கோவிட்டிலிருந்து விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றி தமிழக உரிமையை ஸ்டாலின் நிலைநிறுத்த வேண்டும் என்பதே 7 கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement