dinamalar telegram
Advertisement

பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு, அலுவலகங்களில் ஐ.டி. ரெய்டு

Share
மும்பை, :மும்பை மற்றும் லக்னோவில், நடிகர் சோனு சூட் உடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (செப்.15) திடீர் சோதனை நடத்தினர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் மும்பை மற்றும் லக்னோவில் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (செப்.15) சோதனை நடத்தினர். 'ரியல் எஸ்டேட்' தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • அப்புசாமி -

    பி.ஜே.பி ஆளுங்களத் தவிர வேற எவனும் யோக்கியன் இல்லை. ரெய்டு போட்டுத் தாக்குங்க.

  • இவன் -

    தமிழ்நாடு ல 500ரூ க்கு உதவி பண்ணிட்டு 5லட்சம் ரூபா திருடுன கூட இவனுங்க சரினு சொல்வானுங்க ஓசி சோறு கூட்டம் 🤣🤣

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    இதுதான் விஷயமா? ஏன் நடிகனுக்கு கோடியிலே சம்பாரிச்சாலும் எந்த பிரச்னைனாலும் கம்ன்னு இருக்க காரணம்...ஏதாவது செய்யப்போய் கடைசியில ஐ.டி. ரெய்டு ன்னு கோவணம் வரைக்கும் உருவிவிட்டுட்டாங்கன்னா? துப்புரவன் துப்பட்டும்..இதோ பாராட்டுனவன் யாராச்சும் சோனுக்கு சப்போர்ட்டா ஏதாவது போராட்டம்? ஒரு குரல்...ஹம்ம்ம்ம்ம் துப்புண்ணணும்ன்னா குடும்பத்தோட வருவனுக. அவரு அதைசெஞ்சாருன்னு செய்தி வந்துச்சுன்னா கிட்டத்தட்ட 100 கருத்து மத்தநடிகணுகளை காரித்துப்பி..இப்போ வெறும் 7 கருத்து...இதுல இருந்து துப்புரவன் துப்பிட்டுதான் இருப்பான் நம்ம காசை நாம்தான் காப்பாத்திக்கணும் என நடிகர்கள் நினைப்பது தப்பில்லைன்னு தோணுது..

  • vbs manian - hyderabad,இந்தியா

    நல்லவருக்கு ரைடா. மோடி அரசு கொஞ்சம் விளக்கினால் நன்று.

  • Usha Vasudevan - Singapore,சிங்கப்பூர்

    Only north indians know about him.Bollywood big wigs esp salman wants a political representive.He is moulding sonu.There were many photos of him with contraversial persons in USA.All charity drama.Govt is correct.

Advertisement