dinamalar telegram
Advertisement

சன்சத் டி.வி., துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Share
புதுடில்லி: பார்லிமென்ட் ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை இன்று (செப்.15) பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பார்லி.லோக்சபா டி.வி.யையும், ராஜ்யசபா டி.வி.யையும் இணைத்து ' சன்சத்' டி.வி., என்ற பெயரில் துவக்க கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு எடுக்கப்பட்டது. இதில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள் , இந்தியா வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை பார்லி. வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • jayvee - chennai,இந்தியா

    இனி பப்புவின் காமெடிகளை, தமிழக MP களின் நடிப்புத்திறனையும் ஒருசேர காணலாம்

  • அப்புசாமி -

    சபாஷ்... பா.ஜ துதி பாட ஒரு டி.வி சேனல் ரெடி

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    பாராளுமன்றம் சரியாக நடக்க வில்லையென்றாலும் இந்த மாதிரி விழாக்கள் நடைபெறும்.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    இனிமேல் லோக் சபாவிவிலிம் சன்தான் ராஜ்ய ஸஃபாவிலும் சன் தான் தீய மு. கழகத்திற்கு கொண்டாட்டந்தான். ஒன்றிய அரசு என்று தினந்தோறும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தமிழ் செய்திகள் நிறைய வரும். நிதி அமைச்சர் செந்தமிழில் பேசுவார்

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    இவர் ஏன் SUN TV இந்தியா முழுமைக்கும் கொண்டு வருகிறார்

    • suresh kumar - Salmiyah,குவைத்

      //இவர் ஏன் SUN TV இந்தியா முழுமைக்கும் கொண்டு வருகிறார்..// அந்தந்த மாநிலத்திற்கேற்றாற்போல் உதயா டீ வி, ஜெமினி டீ வி என்று இல்லாமல், இந்தியா முழுமைக்கும் சுத்தமான தமிழ் பெயரான SUN TV கொண்டு வருகிறாரா? நல்லது

Advertisement