dinamalar telegram
Advertisement

கொன்று குவிக்கப்பட்ட 1,500 டால்பின்கள்; ரத்தத்தில் மிதந்த பரோயே தீவுக்கூட்டம்

Share
கோபன்ஹேகன்: டென்மார்க்கின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில், பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில், டென்மார்க்கின் வடக்கில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, கடற்பகுதிக்கு அருகே 1,500 டால்பின்களை ஒரே நேரத்தில் வேட்டையாடி உள்ளனர். கடல்வாழ் சூழலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் டால்பின்கள் கொல்லப்பட்டதால் அந்தத் தீவுகளின் கரைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தன.


ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் டால்பின்கள் வேட்டையாடப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது. 'சூழலியல் சமநிலையைப் பேணும் விதமாக, இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (36)

 • jayvee - chennai,இந்தியா

  முஸ்லிம்தன்மை

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  மணிரத்தினம் சூட்டிங்ல ஒரு குதிரை அடிபட்டதுக்கு கம்ப்ளய்ண்ட் கொடுத்த அந்த பொறம்போக்கு பீட்டா..க்காரனுங்க... இங்க ஆயிரக்கணக்குல டால்பின்களை கொன்றப்ப எங்க போனானுங்க..?

 • shankar - Coimbatore,இந்தியா

  இந்த தீவுக்கூட்டம் இன்னும் ஏன் அழியவில்லை?

 • Suresh Kumar - Salem,இந்தியா

  டால்பின்கள் என்று படிப்பதற்கு பதிலாக தவறாக தலிபான்கள் என்று படித்துவிட்டேன்

 • R Ravikumar - chennai ,இந்தியா

  புலால் / இறைச்சி உண்ணுதலை ஓரளவிற்கு ஏற்று கொள்ளலாம் . பாலைவனத்தில் , கடலில் உயிர் வாழும் மக்கள் வேறு என்ன உன்ன முடியும் ? எது அவர்களை உயிர்ப்போடு வைக்க முடியும் . மேலும் நமது வாழ்வியலில் இறைச்சி உண்ணுவது ஒரு அங்கமாகி விட்ட நிலையில் அதனை ஓரளவிற்கு ஏற்கலாம் . தானியங்கள் , கீரைகள் கூட உயிர் தான் என்ற வகையில். மேலும் ஜல்லிக்கட்டை எடுத்துக்கொண்டால் கூட அதனை விளையாட்டுடன் தான் சேர்க்க முடியும். அந்த மாடுகளை அவர்கள் அப்படி பேணி பாதுகாக்கிறார்கள் அது அவர்களுக்கு பெருமை கூட. ஆனால் இந்த டால்பீன்களை கொன்றது மன்னிக்க முடியாத குற்றம், பாவம். காரணம் இவைகள் உணவுக்காக கொலை செய்ய படவில்லை . இந்த டால்பீன்களை கொன்றது அவர்களுக்கு ஒரு கேவலமான சடங்கு மட்டுமே .கடலை ரத்த சிவப்பாக்குவது தான் அதன் தாத்பர்யம்.அதை உண்கிறார்கள் என்றாலும் அறிவில் ...விட , ஏன் மனிதர்களுக்கு இணையான அறிவினை, உணர்வினை பெற்றஉயிர் அது. வலது மூளை வளர்ச்சி உள்ள உயிரினம். எந்த டெக்னாலஜிம் இல்லாமல் தனது எண்ணங்களை, மன நிலையை பல மைல் தூரத்திற்கு ஒரு குறிபிட்ட அலைவரிசையில் பேசி கொள்ளும், கம்யூனிகேட் செய்யும். பெரிய திமிங்கில கூட்டங்களை அதன் இனப்பெருக்க பயணத்திற்காக பல கடல்களை தூரங்களை தாண்டி இந்த டால்பீன்கள் அழைத்து செல்லும். அதுவும் தவிர மனிதர்களை கண்டால் அதற்க்கு ஒரு மகிழ்ச்சி அல்லது குதூகலம் ஏன் என்று தெரியவில்லை. மனிதர்கள் படகுகளில் பயணிக்கிறார்கள் என்றால் தானே முன் வந்து வழிகாட்டும். சந்தோச குரல் எழுப்பும். படகு கவிழ்ந்தால் முதுகில் சுமந்து கரை சேர்த்த கதை உண்டு ( உண்மை) . இந்த நார்வெ அறிவீலி / அறிவு கேட்ட ஜென்மங்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து இதனை செய்கிறார்கள் . படகில் செல்லும்போதே நாய்க்குட்டியை போல நீந்தி மனிதர்களை அணுகும் இந்த டாலபீன்களை இவர்கள் கம்பி வலையில் இழுத்து வந்து கரையில் அறுத்து கொலை செய்வார்கள் .கரை சிவப்பான பிறகு அதனை உண்ணுவார்கள் அல்லது கடலில் வீசுவார்கள் . மூட நம்பிக்கைகளில் ஐரோப்பிய ஜென்மங்களும் சளைத்தவர்கள் அல்ல . இதற்க்கு எல்லாம் மனிதர்கள் ஆகிய நாம் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். பதிலை கேட்க யாரும் இருக்க மாட்டார்கள் அது அழிவாக தான் இருக்கும். வேதனையுடன் ...

Advertisement