dinamalar telegram
Advertisement

லஞ்சம் வாங்க கூச்சப்படாத அரசு ஊழியர்கள்: ஐகோர்ட் நீதிபதி வேதனை

Share
மதுரை: ‛‛அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதே இல்லை,'' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.


புதுக்கோட்டையில் லஞ்சம் பெற்ற போது கைதான மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.


இந்த வழக்கில் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது:
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கூச்சப்படுவதே இல்லை. லஞ்ச வழக்கில், ஒருவரை கைது செய்தால், அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டும். போலீசாரின் விசாரணை பெயரளவில் உள்ளது. முறையான விசாரணை இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை பெயரளவிலேயே உள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (52)

 • மதுமிதா -

  கூச்சமா? வாரிசுகள் வளம் பெற வேண்டாமா. அரசியலின் முதல் தகுதியே லஞ்சம் தானே. ஜாமீன் இல்லாத கடும் தண்டனை தந்தால் குறையலாம்

 • அப்புசாமி -

  அரசின் சட்டங்களும் அதற்கு துணை போகின்றன. லஞ்சம் வாங்கினால் உடனடி பதவி நீக்கம்னு ஏன் சட்டம் போடக் கூடாது? நேரடி பயனாளிகளைத் தவிர வேறு யாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறாமல் இருக்கக் கூடாதா? படிப்பறிவில்லாத தண்டங்களுக்கு ஏன் அரசாங்கம்? அவிங்களுக்கு ஒட்டளிக்கும் உரிமையும் கூடாது.

 • RajanRajan - kerala,இந்தியா

  ஜுட்ஜ் சாமி, லஞ்சம் எமது பிறப்புரிமை என்று புகழாரம் சூட்டும் மனநிலைக்கு அரசு அதிகாரிகள் முதல் பியூன் வரை பழக்கி விட்டு ஆட்சி ஆளுமை செய்தது அந்த கட்டுமர ஆட்சி காலத்து சாதனை. ஒரு சர்க்கார் சேர்வேன்ட் எனும் பெயரை முற்றிலுமாகி களைந்து அந்த அரசு ஊழியர் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் இன்றைய கலெக்சன் எம்புட்டு எனும் மனநிலையில் அலுவலகத்துக்கு வரும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர் இந்த திருட்டு திராவிட அரசியல்வாதிகள். கூடவே அரசு ஒட்டு வங்கி ஆதாயம் கருதி அரசு ஊழியர்களுக்கு கிம்பளம் பிளஸ் சம்பள உயர்வு என அரசு நிர்வாகமும் லஞ்ச ஊழல்வாதிகளை உருவாக்கி பாமரர்களுக்கான ஜனநாயகத்தை திணற அடித்து கொண்டிருக்கிறார்கள் மைலார்ட். எனவே கையும் களவுமாக பிடிக்கப்படும் அரசு அதிகாரிகளை தூக்கில் போட சட்டம் இயற்றுங்கள் அல்லது குறைந்த பட்ச்சம் அவர்களை குண்டாஸ் சட்டத்தில் இடம் பெற வைத்து அவர்களின் திருட்டு சொத்துபத்துகளை முடக்குங்கள். கடும் சட்டங்களால் குற்றங்கள் தண்டிக்க படாத வரையில் உங்களை போன்றோர் இப்படி புலம்புவதை தவிர வேறு எதையுமே சாதிக்க முடியாது. வாழ்த்துக்கள்.

 • kumar - nandhivaram,இந்தியா

  லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்ற சட்டத்தை உடனடியா கொண்டு வாங்க

 • அப்புசாமி -

  லட்சக்கணக்கான வழக்குகளில் தீர்ப்பே சொல்லாமல் சுளையா சம்பளம் மட்டும் வாங்கிடறாங்கன்னு மக்கள் வேதனை.

Advertisement