dinamalar telegram
Advertisement

வேலூர் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: பள்ளி மூடல்

Share
வேலுார்: வேலுார் அருகே, அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது.
வேலுார் மாவட்டம், வேலுார் அருகே கீழ் அரசம்பட்டைச் சேர்ந்த 40 வயதுள்ள ஆசிரியை ஒருவர் கணியம்பாடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனால் அவர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் பணியாற்றிய கணியம்பாடி அரசு பள்ளி மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement