dinamalar telegram
Advertisement

நிரம்பியது ஆழியாறு அணை: 11 மதகுகளில் உபரிநீர் வெளியேற்றம்

Share
Tamil News
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை நிரம்பியதால், 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரளா பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு அணை பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், இன்று அப்பர் ஆழியாறு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால், அணையின் மொத்த கொள்ளளவான, 120 அடியில், 119.70 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து அணை நிரம்பியது.
இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி மொத்தம் உள்ள, 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1,815 கன அடி நீர்வரத்து உள்ளது. மதகுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக, 1,815 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement