dinamalar telegram
Advertisement

நீலகிரியில் கடுமையான கட்டுப்பாடுகள்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Share
சென்னை: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


நீலகிரியில் சட்டவிரோத கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் எனக்கோரி யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். விடுமுறை காலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.



குடியிருப்பு கட்டடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு, அங்கு தங்கி உள்ளனரா என்பதை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும். நீலகிரியில், சட்டவிரோத ரிசார்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் அரசியல் வியாபாரத்திற்கு உட்பட்டு

  • A.Muralidaran - Chennai,இந்தியா

    அலட்சியப்படுத்தினால் இயற்கை அதன் பாணியில் வேட்டையாடும். விடாது கருப்பு.

  • RajanRP - Chennai,இந்தியா

    இந்த உத்தரவுகளை அரசு கண்டு கொள்ளப்போவதில்லை.சட்ட விரோத ரெசார்ட்கள மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது. அறநிலையத்துறை உயர் நீதி மன்ற உத்தரவு காலை மதிப்பதே இல்லை

Advertisement