dinamalar telegram
Advertisement

அரக்கோணம் வந்த ரயில் இன்ஜினில் மனித தலை: பயணிகள் ஓட்டம்

Share
அரக்கோணம்: அரக்கோணம் வந்த ரயில் இன்ஜினில் மனித தலை இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். தலையைக் கைப்பற்றி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இருந்து, சென்னை வழியாக கர்நாடகா மாநிலம், பெங்களூரு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6:30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் ஒன்றாவது பிளாட்பாரத்திற்கு வந்தது.
அதில், காட்பாடி, ஜோலார்பேட்டை, பெங்களூருக்குச் செல்லும் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது ரயில் இன்ஜின் முன் பகுதியில் ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் ரத்தம் சொட்டியபடி இருந்தது.
இதை பார்த்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் இன்ஜின் முன் இருந்த தலையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ரயில்வே போலீசார் கூறியதாவது: சென்னை - பெரம்பூர் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் சிக்கி இறந்திருக்கலாம் அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது தலை துண்டித்து கொலை செய்து ரயில் இன்ஜினில் வைத்து சென்றிருக்கலாம். தலையை மட்டும் வைத்துக் கொண்டு இறந்தவர் குறித்த விவரம் அறிய முடியாது. இதனால் பெரம்பூர் - அரக்கோணம் மார்க்தத்தில் இறந்தவர்கள் உடலை போலீசார் தேடி வருகின்றனர். உடல் கிடைத்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement