dinamalar telegram
Advertisement

ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு; தி.மு.க.,வில் திடீர் சலசலப்பு

Share
சென்னை: தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட ராஜ்யசபா வேட்பாளர்கள் இருவரில், தகுதியான, திறமையான நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற அதிருப்தி அக்கட்சியினரிடம் உருவாகி உள்ளது.

அக்., 4ல், தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்யசாபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட கனிமொழி என்.வி.என்.சோமு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகிய இருவருக்கும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. அரசியல் வாரிசை ஊக்குவிக்கும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் மகள் என்ற அடிப்படையில் கனிமொழிக்கு எம்.பி., பதவி வழங்கப்படுகிறது. இவர் ஆக்டிவ் பாலிடிக்சில் ஈடுபடாதவர். மருத்துவ அணி மாநில நிர்வாகி என்ற தகுதி மட்டும் உள்ளது. ஆனால், மகளிர் அணியில் மாவட்ட அளவில் தீவிரமாக பணியாற்றும் நிர்வாகிகளிலிருந்து தேர்வு செய்திருக்கலாம் என, மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஹெலன்டேவிட்சன், சென்னையை சேர்ந்த குமரி விஜயகுமாரி போன்ற மூத்த நிர்வாகிகள் பலர் தங்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. புதிய 2 எம்.பி.,க்கள் பதவி ஏற்றால், தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி.,யின் பலம் பத்தாக உயருகிறது. இதில் வன்னியர், முத்தரையர், நாடார், நாயுடு, தேவேந்திரகுலவேளாளர், மீனவர் சமுதாயத்தினருக்கு பிரதிநித்துவம் தரவில்லை.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் தான் மறைந்த என்.வி.என்.சோமு மகள் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் 'வாரிசின் கை' ஓங்கி உள்ளது. அதாவது, முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் பரிந்துரையில் ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதால், கட்சியின் மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், இரண்டாம் கட்ட தலைவர்களிடம் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. ராஜ்யசபாவில் மற்ற கட்சி எம்.பி.,க்களின் கவனத்தை ஈர்ககக் கூடிய தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு கட்சி டிக்கெட் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அறிவிக்கப்பட்ட கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோ தங்களது திறமையை கட்சியில் நிருபிக்கவில்லை. ஏற்கனவே கட்சியில் குறுகிய காலத்தில் ராஜேஷ்குமார் இளைஞரணி நிர்வாகி பதவியிலிருந்து, மாவட்ட பொறுப்பாளராக உயர்த்தப்பட்டார். கட்சிக்காக, உழைத்து வரும் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற நம்பிக்கைய இழந்துள்ளனர். இனி பதவி கேட்டு உதயநிதியின் பின் கட்சியினர் செல்ல உள்ளனர். இதனால், கட்சியில் கோஷ்டி பூசலை அதிகரிக்க வழிவகுக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

 • shan - sydney,ஆஸ்திரேலியா

  அண்ணாமலை பாஜகவின் தலைவராக நியமித்தபோது சீனியர் தலைவர்கள் வருத்தப்படவில்லையா , பாஜகவில் சலலசலப்பு இல்லையா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கட்சியை ஆரம்பித்த ஐம்பெரும்தலைவர்களிடமிருந்து கட்சியை தன வயப்படுத்தி இப்போ உயிரோட இருக்கும் அந்த ஐந்துபேர் குடும்பத்தில் திமுக ஆதரவாக இன்னும் இருக்கும் நடராசனார் பெயர்த்திக்கு ஒரு இடம் கொடுத்திருக்காங்க போலிருக்கு .மற்றபடி அண்ணா மதியழகன் சம்பத் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ஒன்றும் இல்லை

 • Aarkay - Pondy,இந்தியா

  சரியான தேர்வுதான், பெ பெ என வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல், ஆங்கிலம் தெரிந்த, மெத்தப்படித்தவர்களை டெல்லி அனுப்புவது மிகச்சரியாக இருக்கும். பாவாடைகளுக்கு பயந்து ஹெலன் டேவிட்ஸன்-ற்கு வாய்ப்பளிக்கத்தேவையில்லை.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  தி.மு.க.,வில் என்றுமே தகுதிக்கும், நேர்மைக்கும் இடம் இல்லை.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இதில் மட்டும் திறமைக்கு மதிப்பு வேண்டும் என்று எதிர்பார்க்கும் கழக உடன்பிறப்புகள், இட ஒதுக்கீட்டை ஏன் ஆதரிக்கின்றனர்? இந்த ஐடா ஒதுக்கீட்டால் எத்தனை தகுதி உள்ளவர்களுக்கு, மருத்துவம் போன்ற படிப்புகளுக்கும், வேலைவாய்ப்புகளும் கிடைக்காமல் அல்லல் படுகின்றனர்? அது ஏன் உங்கள் கண்ணுக்கு தெரிவது இல்லை?

  • Makkalukkaga - India,இந்தியா

   இட ஒதுக்கீத்தின் நோக்கம் தங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன் .

  • meenakshisundaram - bangalore,இந்தியா

   இதில் தெரிவதற்கு ஒன்றுமே இல்லை நாடு சீரழியும். தகுதி இல்லாதவன் இருப்பது இழப்பு மட்டுமல்ல நாட்டுக்கு அவமானம் கூட.சுதந்திரம் பெற்று இத்தனை வருஷங்களில் ஆகியும் இது தேவை எனில் நாட்டிலுள்ள தகுதி திறமை வாய்ந்த அனைவருமே இந்த நாட்டை விட்டு ஓடி செல்லும் அவலம் தொடர்கிறது .

Advertisement