dinamalar telegram
Advertisement

டில்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை

Share
புதுடில்லி: காற்றுமாசு அதிகரிப்பதை தடுக்கும் வகையில், டில்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளியை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசுவை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், தீபாவளி பண்டிகை காலத்தில் அனைத்து வகை பட்டாசுகளை சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம், மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் முடிவு காலதாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால், பட்டாசு வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த ஆண்டு, பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என, அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா

    தீபம் ஏற்றுவதையும் புவி வெப்பமயமாகுதலை கருத்தில் கொண்டு வாலு அதனையும் தடை செய்யவேண்டும். புத்தாடை அணிவதையும் தடைசெய்ய வேண்டும் ஏன் எனில் மின்சாரம் கொண்டு நெய்வதால், அனல் மின்சாரம் காற்று மாசு மற்றும் புவி வெப்பமாவதற்கு காரணம். கார்கள், ரயில்கள் எல்லாவற்றை தடை செய்து மனிதன் ஆடையில்லாமல் திரிந்த காலத்திற்கு நாம் செல்லவேண்டும். இதனை நான் சொன்னால் பயித்தியக்காரன் என்பார்கள் ஆனால் வாலு இல்லையா நாம் கேட்கவேண்டும் என்பது நம் தலையில் எழுதப்படாத விதி.

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    சீனா பட்டாசுகள் வந்த பின்பு தான் இந்த பிரர்ச்சனைகள் எழுகிறது .தீபாவளி போனஸ் வேண்டாம் என்று யாரும் சொல்வது இல்லை .

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அண்ணாமலை நம் பட்டாசு தொழிலார்கள் நலம் பார்த்து போரிடுவாரா

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    ஹா ஹா கெஜ்ரிவால் ஹிந்துக்கள் எதிரி ஆகி விட்டார் , ஹிந்துக்கள் வாழ்வாதாரம் கெடுத்து விட்டார் என்று புலம்ப போகிறார்கள் பாவம்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    புலம்பல்கள் ஆரம்பம். ஆஹா... தமிழக பாஜக விற்கு ஒரு நல்ல வாய்ப்பு. கேஜ்ரிவாலை எதிர்த்து அண்ணாமலையை வைத்து சிவகாசியில் உண்ணாவிரதம் உக்காரலாம்.

Advertisement