dinamalar telegram
Advertisement

மெகா தடுப்பூசி முகாம் செப்.,19க்கு மாற்றம்: அமைச்சர் சுப்பிரமணியன்

Share
சென்னை: தமிழகம் முழுவதும் செப்.,17ல் நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் செப்.,19க்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த செப்.,12 தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக, 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட கூடுதலாக மொத்தம் 28.36 லட்சம் பேருக்கு அன்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து செப்.,17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‛நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறியும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் இன்னும் வராததால், தமிழகம் முழுவதும் செப்.,17ல் நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் செப்.,19க்கு மாற்றப்பட்டுள்ளது.' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • S.V ராஜன்(தேச பக்தன்...) - chennai,இந்தியா

    செப்டம்பர் 17ம் தேதி போட்டால் மோடிஜியின் பிறந்தநாள் கொண்டாட்ட கணக்கில் சேர்ந்துவிடும் என்கிற இழிவான எண்ணமே காரணம். மருந்தில்லை என்பது மக்களை ஏமாற்ற சொல்லும் பொய்யான காரணம்.👎👎👎

  • Truth Triumph - Coimbatore,இந்தியா

    து தர்பார் என்ன வேண நடக்கும் ...

  • vnatarajan - chennai,இந்தியா

    ஆட்சியர் ஒன்றில் அதாவது நீட் தேர்வு வாக்குறுதியில் சறுக்கினாலும் தடுப்பூசியை போடுவதில் இந்தியாவில் முன்னால் நிற்கிறார்கள்

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    இப்படி பொய் பேசியே நீட் மாணவர்கள் மூன்று பேர்களை கொன்றாய். இப்போது மெகா கோரோனோ தடுப்பு ஊசி திட்டம் மூலம் எத்தனை பேரை கொலை செய்ய போகிறாயா.

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    கோவாக்ஸின் போன மெகா தடுப்பூசி முகாமில் கிடைக்கவில்லை. இடம் chrompet

Advertisement