dinamalar telegram
Advertisement

துவக்க, நடுநிலைப்பள்ளி திறப்பு செப்.,30ல் முடிவு: அமைச்சர்

Share
சென்னை: ‛‛தமிழகத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து செப்.,30ம் தேதி முடிவு செய்யப்படும்,'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளிகளில் மாணவர்கள் வருகை உட்பட பல்வேறு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் கேரளாவை ஒட்டிஉள்ளன. கேரளாவில் தொற்று அதிகம் இருப்பதால் அங்குள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர் மற்றும் திருச்சி, வேலூர் போன்ற பகுதிகளிலும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஒரு சாரார் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்றும், ஒருசாரார் 5 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்.,30ம் தேதி முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • Mohan - Thanjavur ,இந்தியா

    "அமைச்சர்'- சிரிப்பு சிரிப்பா வருது.

  • லீனு - Hyderabad,இந்தியா

    பரப்பு பரப்பு, ஆயிரக்கணக்கில் மக்களை காட்டுக்கு அனுப்பிட்டு தானா அடங்குறப்போ நம்ம அரசு கட்டுக்கு கொண்டு வந்துடுச்சுன்னு மீடியாவுல சொல்லி பரப்பிக்கலாம்.

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    தம்பி ஒரு நல்ல அமைச்சர்....ஊடகங்கள் முன்னால் ஒரே 'ஸ்டாண்டார்டு' மெஸேஜ் எப்போதும்....பள்ளிகள் திறக்கப்போகிறோம் என்பார்....ஒரிரு தேதிகளை குறிப்பிடுவார்.....கடைசியில் மாண்புமிகு முதலைச்சர் தீர்மானத்தின்படி இது செய்யப்படும் என்பார்.....

  • Mayavan Mayavan - Chennai,இந்தியா

    தமிழ் நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனேகமாக பள்ளிகள் திறப்பது மிகவும் கடினம்.

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    பெற்றோர்களுக்கும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கும் துவக்க பள்ளி மாணவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இன்னும் 5 வருடங்களுக்கு பள்ளிகள் திறக்க படமாட்டாது. 5வருடத்திற்கு பின் அதாவது தேர்தலுக்கு முன் எல்லோரும் பாஸ் என்று வரும். இப்படிக்கு கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.ஜெய் ஹிந்த்

Advertisement