dinamalar telegram
Advertisement

கேரளாவில் 2 வாரத்தில் தொற்று எண்ணிக்கை சரியும்: எய்ம்ஸ்

Share
புதுடில்லி: ‛‛கேரளாவில் கோவிட் பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது,'' என, எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் கோவிட் பாதிப்பு அதிகரித்தது. தினசரி பாதிப்பு, 30 ஆயிரத்தை கடந்தது. இதையடுத்து அங்குள்ள மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கேரளாவில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்தியக் குழு பரிந்துரைத்தது. இந்நிலையில், 'கேரளாவில் கோவிட் பாதிப்பு உச்சத்தை கடந்துவிட்டது' என, எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:
செப்டம்பர் முதல் வாரத்தில் ஒரு நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்புகள் கேரளாவில் பதிவாகின. அதன்பின் கேரளாவில் தினசரி பாதிப்பு தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிகளைப் போலவே கேரளாவிலும் பாதிப்பு குறைகிறது. கேரளாவில் முந்தைய செரோ ஆய்வில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதை தெரிவித்தது. ஆனால், சமீபத்திய செரோ ஆய்வில், தடுப்பூசி அல்லது நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு திறன் 46 சதவீதம் இருப்பதை காட்டுகிறது. இது மாநிலத்தில் கோவிட் பரவல் வேகத்தை குறைக்கிறது.

கடந்த 2 - 3 மாதங்களில் பரவிய வைரசின் தரவைப் பார்க்கும்போது கேரளா அதன் உச்சத்தை கடந்துவிட்டதாக தோன்றுகிறது. அடுத்த 2 வாரங்களில், தொற்று எண்ணிக்கை சரியத் தொடங்கும். அக்டோபர் தொடக்கத்தில் கேரளாவில் கோவிட் பாதிப்பு வெகுவாக குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • P SRIDHARAN - CHENNAI,இந்தியா

    கேரள அரசாங்கம் அதன் மக்கள் எதையுமே சரியாக கடைபிடிக்காமல் மத்திய அரசு எவ்வளவோ அறிவுறுத்தியும் கேட்காமல் இப்போது தும்பை விட்டு வால புடிக்கிறாங்க எல்லா மாநிலங்களும் ஒத்து போனபோது இவர்கள்மட்டும் கொடிபிடித்தார்கள். இப்போதாவது வீண் வாதம் செய்யாமல் மக்களுக்கு சரியான மருத்துவ அணுகுமுறை செய்தால் காரோணவிலிருந்து தப்பிக்கலாம். வேடிக்கை மனிதர்களை போல் இன்னும் வீம்பு தேவை இல்லை

  • Mayavan Mayavan - Chennai,இந்தியா

    கொரானாவிற்கு எதிராக ஜிகாத்தா.

  • DVRR - Kolkata,இந்தியா

    இதன் அர்த்தம் இந்தியாவில் கொரோன தொற்று எண்ணிக்கை சரியும் என்று சொல்கின்றார்கள் ஏனென்றால் இந்தியாவின் ஒரு சிறிய மாநிலமான கேரளாவில் தான் 75%க்கும் அதிகமாக கொரோன தொற்று மொத்த இந்திய கொரோன தொற்றில் பல நாட்களாக இன்று கூட (பதினைஞ்சாயிரம் கேரளா இந்தியாவில் 27,000- மற்ற அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் 12,000)

  • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

    கேரளாவில் தொற்று பாதிப்பு எல்லோருக்கும் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது... இனி புதிதாக தொற்ற அங்கு ஆட்கள் இல்லை... ஆகவே சரியத்தான் செய்யும்...

  • Krishnan - Coimbatore ,இந்தியா

    எய்ம்சின் ஜாதக கணக்கு சரியாக தான் இருக்கும். இவர்கள் தான் சொன்னார்கள் அக்டோபரில் 3 ஆம் அலை வரும் என்று, இப்போ குறையும் என்றும் இவர்கள் தான் சொல்கிறார்கள். என்னவோ எய்ம்சின் ஜாதக பலன் பழிக்கட்டும்.

Advertisement