dinamalar telegram
Advertisement

போக்சோவில் இருவர் கைது

Share
பொள்ளாச்சி : சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை, பொள்ளாச்சி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கர்நாடகா மாநிலம், உடுப்பியைச் சேர்ந்தவர் கணேசன்,24. கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் மசாலா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் போலீசார் சிறுமியை மீட்டனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கணேசனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

உடுமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி பூபதி,26. இவருக்கும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 11ம் தேதி, சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில், பூபதியை போக்சோ பிரிவில், பொள்ளாச்சி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement