dinamalar telegram
Advertisement

திருச்செந்துாரில் அன்னதானம் நாளை துவக்கம்

Share

துாத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், தரிசனத்திற்கு நீண்டநேரம் காத்திருக்காமல் இலகுவாக மேற்கொள்ளவும் ரூ.150 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூன்று நேர அன்னதானம் திட்டம் நாளை 16 ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் அன்னதான மண்டபத்தையும், சமையலறைகளையும் ஆய்வு செய்தார். பின்னர் கூறியதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், சுவாமி தரிசனத்திற்காக நீண்டநேரம் காத்திருக்காமல் இலகுவாக சென்றுவர அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஒரு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது.அதில் சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய வரைவு திட்டம் வந்ததும் ரூ. 150 கோடி செலவில் அறநிலையத்துறை நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கோவிலுக்குள் போதியளவு அர்ச்சகர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றுவார்கள். திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவில்களில் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படும். வரும் 16 ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கிவைக்கிறார்.

கடந்த 4ம் தேதி ஹிந்து அறநிலைத்துறை மானிய கோரிக்கையில் கோவில் சொத்துகள் மீட்கப்படும் என்று தெரிவித்தோம். அன்றைய தினமே ரூ.642 கோடி அளவுக்கு சொத்துக்கள் மீட்கப்பட்டது. இன்றுவரை ரூ.900 கோடிக்கு மேல் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

எங்களது இலக்கை விடவும் அதிக ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்படும். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து பக்தர்கள் புகார் அளிக்கலாம். கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.இறைவனுடைய சொத்துக்கள் இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்தோடு இந்து சமய அறநிலைத்துறை ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்டெடுக்க வேகமாக செயல்படும்.

ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 300 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடைபெறாத கோவில்களுக்கு விரைவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement