dinamalar telegram
Advertisement

104ல் தற்கொலை தடுக்க ஆலோசனை

Share
சென்னை : தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து '104' மருத்துவ சேவை மையத்தில் பிரத்யேக ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் இன்று செயல்பாட்டுக்கு வருகிறது.


இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
\மன ரீதியாக பாதிக்கப்படுவோரின் மன திடத்தை அதிகரித்தால் அவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிடுவர். குறிப்பாக வீட்டில் இருப்பவர்களிடமோ நண்பர்களிடமோ மனம் விட்டு பேசும் போது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.அதன்படியே 104 மருத்துவ சேவையில் பிரத்யேக மையம் துவங்கப்பட்டு உள்ளது. தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் 104 எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும்.மேலும் அடிக்கடி அவர்களிடம் தொடர்பு கொண்டு நண்பர்களாக பேசி இயல்பு நிலைக்கு அவர்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.இந்த மையம் இன்று செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement