dinamalar telegram
Advertisement

கலர் பொடி சேர்க்கப்பட்ட சிக்கன், பிரியாணி பறிமுதல்

Share
Tamil News
சென்னை : தி.நகரில் உள்ள ஓட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் 65 கிலோ அதிகம் கலர் பொடி சேர்க்கப்பட்ட பிரியாணி, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஓட்டலில் 'தந்துாரி' சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் விளைவாக, உணவு பாதுகாப்பு துறையினர் தமிழகம் முழுதும் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.அந்தவகையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டல்களில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கெட்டுப்போன கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள, 11 கடைகளில், உணவு பாதுகாப்புதுறை சென்னை மாவட்டம், நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சதாசிவம் என 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், அதிகம் கலர் பொடி சேர்க்கப்பட்ட 30 கிலோ சிக்கன் 25 கிலோ பிரியாணி 10 கிலோ கிரில் சிக்கன் ஆகியவறை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், இந்த திடீர் சோதனைகள், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர வேண்டும், மக்கள் உயிருடன் விளையாடும் ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement