dinamalar telegram
Advertisement

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

Share
சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 6, 9 தேதிகளில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை நாளை (செப்.,16), நாளை மறுநாள் (செப்.,17) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பகுதிக்கு ரூ.2 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

  • Aarkay - Pondy,இந்தியா

    அண்ணியையும் சுதீஷையும் ஓரம் காட்டினால், கட்சி உருப்படும். யாருமே சுதீஷிற்காகவோ, அண்ணிக்காகவோ வோட்டு போடப்போவதில்லை.

  • Mohan - Thanjavur ,இந்தியா

    ஆரம்பம் எப்போதும் இப்படித்தான் நல்லாருக்கு. ஆனா பினிசிங்ல கோட்ட விடுறீங்களே,கேப்.

  • Rajasekaran Ayyavoo - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    Singam

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    எப்படி போட்டியிட்டாலும் செத்த பிணம் பிழைக்காது

  • Godyes - Chennai,இந்தியா

    நீ ஜெயித்தாலும் தோத்தாலும் ரெண்டும் ஒண்ணுதான்.

Advertisement