dinamalar telegram
Advertisement

1 கி.மீ., துாரத்திற்கு

Share
வந்தவாசி : வந்தவாசி அருகே, ஒரு கி.மீ., துாரத்திற்கு மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் திருட்டு போனது.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மூலம், விழுதுபட்டு கிராமத்திற்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, விழுதுபட்டு கிராமத்தில் வயல்வெளிகளில், ஒரு கி.மீ., துாரத்திற்கு மின்கம்பங்களில் உள்ள மின் கம்பியை, ஒரு கும்பல் திருடி சென்றது.இது குறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மின்வாரிய பொறியாளர் ஆய்வு செய்து, மின்கம்பி திருட்டு குறித்து, கீழ்கொடுங்காலுார் போலீசில் புகார் செய்தார். மின்கம்பி திருட்டால், அப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்டு, விவசாயிகள் பம்பு செட்டு இயக்க முடியாமல் திணறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement