dinamalar telegram
Advertisement

கூட்டணி விவகாரம்: பா.ம.க., - அ.தி.மு.க., விமர்சனம்

Share
சென்னை: ‛‛கூட்டணியால் எந்த பலனும் இல்லை,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‛‛தனித்து போட்டியிடுவதால் பா.ம.க.,வுக்கு தான் இழப்பு,'' என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில உயர்நிலை கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி பங்கேற்றனர். அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க., காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை.

சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா?. அ.தி.மு.க.,வுடன் தற்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது. சரியான தலைமை இல்லாததால் அ.தி.மு.க., தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் வென்று பா.ம.க.,வின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம்.

பா.ம.க.,வால் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தன, ஆனால், கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த பலனும் இல்லை. கடந்த தேர்தல் பணிகளில் அ.தி.மு.க., தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு வேளை இவர்கள் ஒத்துழைப்பு தந்திருந்தால் சட்டசபை தேர்தலில் தற்போது வெற்றி பெற்ற 4 தொகுதிகளை காட்டிலும் நிறைய தொகுதிகளில் வென்றிருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ம.க.,வுக்கு இழப்புசென்னையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தனித்து போட்டி என்பது பா.ம.க.,வின் தனிப்பட்ட முடிவு. யாருடைய கட்டாயத்தின் பேரில் இந்த முடிவை எடுத்தார்கள் என தெரியவில்லை. இதனால் அக்கட்சிக்கு தான் இழப்பு. அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை என்பது கிடையாது. அது பற்றி பா.ம.க., பேச வேண்டிய அவசியம் இல்லை.
.மக்கள் எங்களுடன் இருக்கும் வரை எந்த இழப்பும் கிடையாது. அவர்களுக்கு தான் இழப்பு. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு தான் பதிப்பு. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும். ஆளுங்கட்சியினர், மக்களை முழுமையாக மொட்டையடித்து விட்டனர். இது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எனவே, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எனக்கூறினால் மக்கள் கை கொட்டி சிரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தோளில் போட்டிருக்கும் துண்டுஇந்தவிவகாரம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணி என்பது சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே, அவர்கள் வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். அது உண்மைதான் ,ஆரம்பம் ஆகிவிட்டது கூட்டணி விரிசல். காரியம் முடிஞ்சுபோச்சு பெட்டி வாங்கியாச்சு - ஒரு ராஜ்ய சபா சீட்டும் வாங்கியாச்சு. தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக ஐடா ஒதுக்கிவிடும் வாங்கியாச்சு. இனி அடுத்த ராஜ்ய சபா ஸீட்டுக்கு அடுத்த கூட்டணிக்குத்தாவல். இதுதாய்யா தமிழ்நாட்டின் தலை சிறந்த ஆட்சித்திறமை. ஆட்சிக்கே வராமல் எப்படி சீட்டு வாஙுகுது பாத்தியா? தைலாபுரமா கொக்கா?

 • Srinivas.... - Chennai,இந்தியா

  ராயபுரத்தான் விருந்து சாப்பிட்டான் தைலாபுர தோட்டத்தில்....

 • Srinivas.... - Chennai,இந்தியா

  இனிமேல் மாத்தி மாத்தி விமர்சனமா வெளியிடுவானுங்க....

 • Mayavan Mayavan - Chennai,இந்தியா

  கூட்டாக நின்றே பொரியல் ஆகிய கட்சி. தனியாக நின்றால் தீஞ்சு போகும்.

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  அணைத்து கட்சிகளும் தனித்தனியாக நில்லுங்கள் அப்போதுதான் உண்மையான பலம் தெரியவரும்.

Advertisement