dinamalar telegram
Advertisement

பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்

Share
Tamil News
பொள்ளாச்சி : குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தி.மு.க., அரசை கண்டித்து, பொள்ளாச்சியில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசுகையில், ''குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது, சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கியை தன் பக்கம் இழுக்க தி.மு.க., நடத்தும் கபட நாடகம். கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அண்ணாதுரை பிறந்தநாளில் விடுதலை செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது பல்வேறு தவறான சம்பவங்களுக்கு வழிவகுக்கும்,'' என்றார்.

டி.எஸ்.பி., குறுக்கீடு

இப்ராஹிம் பேசுகையில், தனக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் சில அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டார். அப்போது, பொள்ளாச்சி டி.எஸ்.பி., தமிழ்மணி குறுக்கிட்டு, ''எதற்காக வந்தீர்களோ, அதை பற்றி மட்டும் பேசுங்கள்; அமைப்புகளின் பெயர்களை கூறக்கூடாது,'' என்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement