dinamalar telegram
Advertisement

ஆயுள் தண்டனை என்பது கடுங்காவல் தண்டனை தான்

Share

புதுடில்லி : 'ஆயுள் தண்டனை என்பது கடுங்காவல் தண்டனை தான்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



அசாமை சேர்தவர் முகமது அல்பாஸ் அலி. கொலை வழக்கு ஒன்றில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கவுகாத்தி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை தான் விதித்தது. ஆனால், எனக்கு சிறையில் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிடில், சிறையில் கடுங்காவல் தண்டனை வழங்க தடை விதிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.

இதேபோல், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள் எல்.என்.ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, கூறியதாவது:
ஆயுள் தண்டனை என்பது கடுங்காவல் தண்டனை தான். மஹாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில், இதை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால், இது பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை.
இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement