dinamalar telegram
Advertisement

படகு கவிழ்ந்து விபத்து: நீரில் மூழ்கி 4 பேர் பலி

Share

அமராவதி : மஹாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போன ஏழு பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடேகான் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் அம்ராவதி மாவட்டம் சுன்ஜ் கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் அருகில் உள்ள ஒரு கோவிலை காண வர்த்தா ஆற்றில் படகில் சென்றனர்.அப்போது நடுவழியில் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். படகோட்டி உள்ளிட்ட இருவர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர்.

தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் நீரில் மூழ்கி இறந்த நான்கு பேரின் சடலங்களை கைப்பற்றினர். எஞ்சிய ஏழு பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 'படகில் அதிகமானோர் சென்றது தான் விபத்துக்கு காரணம்' என போலீசார் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்கிற்கு வந்தோருக்கு இறுதிச் சடங்கு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது சுன்ஜ் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement