dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் பேசி சுமூக முடிவு: தி.மு.க.,

Share
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமூக முடிவு எடுக்க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை தி.மு.க., அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் அக்.,6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்.,15) துவங்கியது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமூக முடிவு எடுக்க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை தி.மு.க., அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்துபேசி, சுமூக முடிவு செய்திட வேண்டுமென மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Mayavan Mayavan - Chennai,இந்தியா

    ஹவுஸ்புல். இனிமே மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போலாம்.

  • Narayanan - chennai,இந்தியா

    துரைமுருகன் தயவுசெய்து இனியும் மதசார்பற்ற கூட்டணி என்று சொல்லாதீர்கள். தங்களின் கூட்டணி கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் துணைமட்டும் போதும் என்று இவர்களுக்கு மட்டுமே ஆதரவு கொடுத்து இந்துக்களை வேறுமாதிரிநடத்தும் இந்த கூட்டணி இனி மதசார்பற்ற கூட்டணி இல்லை . மக்களை ஏமாற்ற வேண்டாம் . மக்களே இந்து உணர்வோடு செயல்படுங்கள் . வருகின்ற எந்த தேர்தலிலும் இவர்களை சேர்க்காதீர்கள் .இவர்களின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் சுமூகமாக பேசுவார்களாம் > அவர்கள்தான் அடிவருடிக்கொண்டுஇருக்கிறார்களே . இப்போ சேகர் பாபு விஷயத்தில் , நீட் மரண விஷயத்தில் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டுவிட்டார்களே . பிறகு என்ன சுமூக பேச்சுவார்த்தை

    • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

      நாராயணன் , இந்து எதிர்ப்புன்னு சொல்லாதீங்க. பிராமண எதிர்ப்புன்னு சொல்லுங்க ஏத்துக்கறோம். அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆக்கலாமென்கிற தீர்மானத்த எப்படி பாக்றீங்க? இப்ப எல்லா இந்துக்களும் உங்களுக்கு தேவைப்படுதா? நாங்க இந்துக்கள் சந்தோஷமாத்தான் இருக்கோம்.

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    சில கட்சிகள் தனித்து நிற்பதை பார்த்தா, திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணியை ஊதித் தள்ளிவிடும் போலேயே இல்லை, டில்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு பிஜேபி தலைவர்கள் வருகிறார்கள்.....கட்சிகள் தோற்றதற்குரிய காரணங்களையும் இப்போதே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்...

Advertisement