dinamalar telegram
Advertisement

நைஜீரியாவில் 2,300 பேர் பலி

Share

லாகோஸ் : ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இந்த ஆண்டு, காலராவுக்கு 2,300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.



நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக, காலரா நோய்க்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.கொரோனா பரவல் தாக்கத்திலிருந்து, நைஜீரியா இன்னும் எழுந்து கொள்ளவில்லை. அந்நாட்டில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே, முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நைஜீரியாவில் காலரா நோயும் பரவியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டு, காலரா நோயின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

மொத்தம் உள்ள 36 மாகாணங்களில், 26 மாகாணங்களில் 69 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 15 வயதுக்குட்பட்டோரிடம், காலராவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.காலரா நோய்க்கு இந்த ஆண்டு இதுவரை, 2,300க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement