dinamalar telegram
Advertisement

குடியிருப்பின் மேற்கூரையில் உயரழுத்த மின் வடத்தால் ஆபத்து

Share
பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராஜிவ்காந்தி தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இத்தெருவில் உள்ள குடியிருப்புகளின் மேற்பகுதியில், உயரழுத்த மின் வடம் செல்கிறது. இதனால், அந்த வீட்டின் மேல் தளத்தில் கட்டடம் கட்ட முடியாத சூழலும், துணிகளை காயவைக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது குறித்து, மின் வாரியத்தில் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர்.பல வாரங்கள் ஆகியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், தகுந்த பதில் இல்லை. மின் வடத்தால், உயிரிழப்பு ஏற்படும் முன், உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement