dinamalar telegram
Advertisement

தமிழக பாடத்திட்டத்தில் 82% கேள்வி : நீட் எழுதிய மாணவர்கள் உற்சாகம்

Share
Tamil News
மதுரை : தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 82 சதவீதம் வினாக்கள் இடம் பெற்றுள்ளதால் இந்தாண்டு நீட் நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு சாதகமாக அமையும் என கல்வியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக இத்தேர்வு மீதான நம்பிக்கை மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் இத்தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்ற அரசியல் கட்சிகளின் தவறான வாக்குறுதிகளை நம்பி மாணவர்கள் பலர் இந்தாண்டு மனரீதியாக இத்தேர்வுக்கு தயாராக முடியாமல் போனதை காண முடிந்தது.அதேநேரம் கட்சிகளின் எதிர்ப்பு பிரசாரத்தை தாண்டி, நீட் தேர்வு மீது மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், இந்தாண்டு தேர்வில் மாநில பாடத்திட்டப்பகுதிகளில் இருந்து 82 சதவீதம் வினாக்கள் இடம் பெற்றிருந்தது தான்.

தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில், 163 வினாக்கள் மாநில பாடத் திட்டத்தின் பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் கடினம் என ஒருசில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் கேட்கப்பட்டிருந்த 50 வினாக்களில் 48 மாநில பாடத்திட்டத்தில் உள்ளன என நீட் நுழைவுதேர்வு வினாத்தாள்குறித்து பகுப்பாய்வு செய்த கல்வி அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: 2019ல் 1,017 பேர் இத்தேர்வை தமிழ் மொழியில் எழுதினர். 2020ல் 17,101 பேர் எழுதியுள்ளனர். 17 மடங்கு அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதமும் 2019 ல் 48.57 சதவீதத்தில் இருந்து 2020ல் 57.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வரும் காலங்களில் இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • ஆரூர் ரங் -

    நீட்டில் 60 விழுக்காடு எடுத்தாலே மருத்துவ சீட் எளிதில் கிடைக்கிறது. பிளஸ் டூ அடிப்படையில் கொடுத்தபோது 99 விழுக்காடு எடுத்தா🥲 மட்டுமே சீட்டு கிடைத்தது . இப்போ 80 க்கு 60 எப்படியும்😁 எளிதுதான்

  • பாமரன் -

    போன வருஷம் 95 சதவீதம் கேள்விகள் மாநில அரசின் சிலபஸ்ல இருந்து கேட்கப்பட்ட விஷயத்தை செலக்டிவ் ஜர்னலிஸத்தில் மறைச்சிட்டு ஐ ஆம் ஹாப்பி திஸ் இயர் அப்பிடின்னு போடுற கொடுமையை என்னன்னு சொல்றது...🤔🤔

  • Syed kather - SINGAPORE,சிங்கப்பூர்

    நீட் சிலபஸ்சிற்கு தகுந்தாற்போல ஏன் இந்தியா முழுவதுமே ஒரே பாடத்திட்டதை மாற்றக்கூடாது? ஏன் சி.பி.ஸ்.சி., ஐ.ஸ்.சி, மெட்ரிக் ,என தானியார் பள்ளிக்கு ஒரு சிலபஸ் , அரசு பள்ளிக்கு ஒரு சிலபஸ் , அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சிலபஸ் வைக்கலாமே அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அளவிற்கு தரம் உயர்த்தலாம் அல்லது தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்கினால் , ஏழை பணக்காரகள் பாகுபாடு இன்றி அனைத்து மாணவருக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்குமே இந்த கோணத்தில் மத்திய, மாநில அரசை ,எதிர் கட்சியும், கல்வியாளர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் கோரிகைகள் வைக்கலாமே அல்லது எதிர் கட்சிகள் போரடலாமே???

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இதை இந்த அரசியல் வாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அரசியல் செய்ய முடியாதே.

  • Gopalan - Coimbatore ,இந்தியா

    இந்த நிலையில் தற்கொலை என்றால் படிக்காத்து காரணமா? தூண்டுதல் அரசியலா?

Advertisement