dinamalar telegram
Advertisement

63 வயதில் நீட் தேர்வு எழுதிய ஆசிரியர் இளம் மாணவர்களுக்கு ரோல் மாடல்!

Share
Tamil News
சென்னை :அரசு பள்ளி முன்னாள்தலைமை ஆசிரியர், 63 வயதில் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்துள்ளன.கடந்த 12ம் தேதி நடந்த நீட் நுழைவு தேர்வில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு எழுத வயது ஒரு தடை அல்ல என்பதால், 63 வயது நிறைந்த முனுசாமி என்ற அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும் தேர்வில் பங்கேற்றுள்ளார்.

பணி ஓய்வுசென்னை பெருங்குடியில் வசிக்கும் முனுசாமி, எம்.எஸ்சி., - எம்.எட்., -எம்.பில்., மற்றும் எம்.பி.ஏ., படித்துள்ளார்.கடந்த 1984ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, கவர்னர் மாளிகையில் சுருக்கெழுத்தராக பணியை துவங்கிய முனுசாமி, 1987ல் போலீஸ் துறையில் நேரடி எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்று தேர்வாகி, எஸ்.ஐ.,யாக நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
அதன்பின், போலீஸ் துறையில் இருந்து கல்வித் துறைக்கு மாறினார். முதுநிலை ஆசிரியராக தேர்வாகி, செங்கல்பட்டு, பொலம்பாக்கம் பள்ளியில் பணியாற்றினார். பின், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 15 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியராக பணிபுரிந்தார். பின், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றார்

.இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி, தினேஷ் கண்ணா என்ற மகன், மஞ்சு என்ற மருமகள், லட்ஷிதா மற்றும் பரினிதா என்ற பேத்திகள் உள்ளனர்.நீட் தேர்வு எழுதியது குறித்து ஆசிரியர் முனுசாமி அளித்த பேட்டி:வடமாநிலத்தில் அப்பாவும், மகளும் நீட் தேர்வு எழுதி ஒரே கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர்.இந்த தகவலை, அசோக் நகர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர்கள் உதயகுமார், மணிமாறன் ஆகியோர் என்னிடம் தெரிவித்து, என்னையும் நீட் தேர்வு எழுத ஊக்குவித்தனர்.

நம்பிக்கைபின், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், ஆதரவும்கிடைத்தது. நீட் தேர்வுக்கு பல்வேறு புத்தகங்கள் வாங்கி ஐந்து மாதங்கள் சொந்தமாக படித்து பயிற்சி பெற்று, தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு 351 மதிப்பெண் கிடைக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால், வடமாநில கல்லுாரியில் சென்று படிக்கவும் தயாராக உள்ளேன்.நான் செங்கல்பட்டு மாவட்டம் பட்டிகுளம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிட பள்ளியில் படித்தவன். மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் படிப்பையும், நந்தனம் அரசு கல்லுாரியில் பட்டப்படிப்புகளையும் முடித்துள்ளேன். எப்படியும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கோழைத்தனம்தன் 63 வயதிலும் நீட் தேர்வை எழுதியுள்ள ஆசிரியர் முனுசாமியை, இளம் மாணவர்கள் தங்களின் 'ரோல் மாடலாக' எடுத்து கொண்டு, எந்த வயதிலும் விருப்பப்பட்ட படிப்பை படிக்கலாம் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். மாறாக, நீட் தேர்வை கண்டு அச்சப்பட்டு, ஒதுங்கி தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுத்து, வாழ்வை வீணாக்கி விடக்கூடாது என, கல்வியாளர்களும், உளவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.-

'ஜிம்' உரிமையாளரின் 'நீட்' தேர்வு ஆர்வம்!சென்னை வடபழநியை சேர்ந்த ஜிம் உரிமையாளர் மோகன், தன், 47வது வயதில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இவர் தன் மகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தானும் படிக்க ஆரம்பித்து நீட் தேர்வை எழுதியுள்ளார்.நீட் தேர்வில் 550 மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தேர்வு எழுத மகனும், மகளும் உறுதுணையாக இருந்ததாக அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

 • SaiBaba - Chennai,இந்தியா

  மருத்துவம் படிக்க ஆசைப்பட்டால் கண்டவன் எல்லாம் நீட் எழுதுறான். நாங்க எப்படி மருத்துவ இடங்களை மிகுந்த செல்வந்தர்களுக்கு மட்டும் என்று பொத்திப் பொத்தி வைத்திருந்தோம். போறவன் வாரவன் எல்லாம் எழுதற மாதிரி இந்த மோடி கடை விரிச்சிட்டாரே, இது நியாயமா, சொல்லுங்க மக்களே.

 • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

  நீட் பரீட்சை கோச்சிங்லே சேருடான்னு சொன்னா, “இப்ப என்னப்பா அவசரம், 60 வயசுக்கு மேலே படிச்சிக்கிறேன்ப்பா” ங்குறான் பிள்ளையாண்டான். இவனைப் பெக்குறதுக்கு பதிலா பிரண்டையை பெத்துருந்தா தொவையல் பண்ணித் தின்னுருக்கலம். 🤣😂

 • மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா

  என்னடா படிக்காமெ ஒக்காந்திருக்கேன்னு பையனைக் கேட்டா, நீ ஏன் படிக்காம தண்டமா ஒக்காந்திருக்கேன்னு பையன் கேக்குறான். ஹூம்..

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  இந்த அறுபத்தி மூன்றுவயதில் தேர்வுஎழுதி அதில் பாஸாகி மருத்துவக்கல்லாரியில் இடம் கிடைத்தால் ஐந்து வருடம் படித்து அதற்குப்பிறகு ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி பெற்ற பிறகே இவருக்கு மெடிக்கல் போர்டினமிருந்து மருத்துவராக செயல் பட முடியும் என்றால் முயற்சி திரு வினையாக்கும் என்பதற்கு இவர் ஒரு உதாரண புருஷனாக திகழ்வார் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை.

 • Chandramouli, M.S. - Chennai,இந்தியா

  Of course, his efforts and enthusiasm is well appreciated.

Advertisement