dinamalar telegram
Advertisement

நீட் விவகாரத்தில் உண்மை நிலையை விளக்குங்க!

Share
Tamil News
சென்னை :'தி.மு.க., தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்களின் உயிரிழப்பை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை விளக்க வேண்டும்' என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:'நீட்' தேர்வு தோல்வி பயத்தால், அரியலுார் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதியின் இரண்டாவது மகள் கனிமொழி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.மருத்துவ படிப்பு என்பது பெரும்பாலான மாணவர்களின் கனவு. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை.

ஆபத்தானதுமருத்துவத்திற்கு பக்கபலமாக நர்சிங், பார்மசிஸ்ட் படிப்பு, எக்ஸ் - ரே, ஸ்கேனிங், மருத்துவ பொறியியல், பயோ மெடிக்கல், இன்ஜினியரிங், பி.பார்ம்., என, குறைந்தபட்சம் 40க்கும் மேற்பட்ட பல இணை படிப்புகள் உள்ளன.இவற்றை படிக்க நீட் நுழைவுத்தேர்வு தேவைஇல்லை. பலதரப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் பலர் மருத்துவர்கள் அல்ல.தற்கொலை முடிவு என்பது ஆபத்தானது. இதுபோன்ற எண்ணங்கள் மனதில் ஏற்படும் போது மாணவர்கள் தனியாக இருக்கக் கூடாது. பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் அருகில் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.உங்களை பிளஸ் 2 வரை படிக்க வைக்க, உங்கள் பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், நீங்கள் இரவு, பகலாக விழித்திருந்து படித்து, தேர்வு எழுதி வாங்கிய மதிப்பெண்ணையும் மனதில் நிலை நிறுத்துங்கள்.

உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூருங்கள். தி.மு.க., தன் அரசியல் நாடகத்தையும், நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை வேடிக்கை பார்ப்பதையும் இனியாவது நிறுத்தி விட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.

தன்னம்பிக்கைதேவைப்பட்டால், நீட் தேர்வு எழுதியமாணவர்களுக்கு, ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழு வழியே சிறப்பு வகுப்பு நடத்தி, மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

 • Mohan - Thanjavur ,இந்தியா

  பேச்ச பாரு பேச்ச, ஆட்சிய பறிகொடுத்துட்டு.

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  ஐயா எடப்பாடி இந்த நீட் யாரு ஆட்சியில் வந்தது என்று உங்களுக்கு தெரியாத பின்ன எதுக்கு ஆளும்கட்சி குடைஞ்சிகிட்டு இருக்கீங்க. பிஜேபி ஆட்சியில் இருக்கின்ற வரை இந்த நீட் ஒலிக்க முடியாது. கூடிய சீக்கிரம் தமிழகத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடு வர போகிறது அதை நீங்களும் உணர்வீர்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஏன் பாஜக விற்கு இவ்வளவு பிடிவாதம்? தமிழ் நாட்டின் மீது இவ்வளவு வெறுப்பு, விரோதம்?

 • RajanRajan - kerala,இந்தியா

  சட்டப்போராட்டம் அது இதுன்னு சொல்லியே இந்த கோடாங்கி இன்னும் மிச்ச வருடத்தை ஓட்டிடுவான்.

  • Srinivas.... - Chennai,இந்தியா

   நீ ஒரு கேடுகெட்ட இழிந்த ஜென்மம். கல்லடிபட்டு சாவாய்...

  • Srinivas.... - Chennai,இந்தியா

   RajanRajan - Kerala,இந்தியா... பீசப்பி கொள்ளைக்கும்பலுக்கும், கொடநாடு கொள்ளையன் அடிபொடிக்கும் கால் பிடித்து கீழ்த்தர பிழைப்பு பிழைக்கும் கேடுகெட்ட ஜென்மம் நீ....

  • Anand - chennai,இந்தியா

   மதம்மாறி கைக்கூலி போலி ஹிந்து பெயரில், இதுதான் அந்நிய கேடுகெட்ட எச்சங்களின் இழிவாழ்க்கை.

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   ஸ்ரீனிவாஸ், அப்போ நீங்க என்ன ? உங்களுக்கு எப்படிப்பட்ட முடிவு வரும் ? பீசப்பியும், அதிமுகவும் கொள்ளையர்கள் என்றால், திமுகவை எந்த கணக்கில் சேர்ப்பது ??? அதன் அல்லக்கையான வி சி க வை எங்கே நிறுத்துவது?? உங்க அருமைத் தலைவர் சொன்னமாதிரி நீங்க சாபமிடுவதற்கும் அது பலிப்பதற்கும் நீங்க ஒன்றும் "முற்றும் துறந்த முனிவர்" அல்ல .........

  • RajanRajan - kerala,இந்தியா

   சாபங்கள் கொடுத்தவனை தான் வந்து புகலிடம் தேடும். நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதை பாடி வைப்பேன் எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.....எனும் உயிரோட்டம் மிக்க கவிஞனின் வேத வாக்கு இது.

 • RajanRajan - kerala,இந்தியா

  இன்னாது உண்மைநிலை இன்னான்னு சொல்லணுமா? அதுதான் அவனவன் ஆங்காங்கே ஆளில்லாத டீ கடையிலே குந்திகினு வுடாம் டீ ஆதுரனுங்கல்லே. ரகசியம் தெரிந்த அந்த சின்ன .. தலைமறைவாயிட்டான். இன்னொரு பக்கம் மாணவர்களை வைத்து பாலிடால் கலக்குறானுங்க.

  • Srinivas.... - Chennai,இந்தியா

   PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

Advertisement